ஷீனா உயிருடன் தான் உள்ளார், அமெரிக்காவில் இருக்கிறார்: இந்திராணி புதுக்கதை
மும்பை: ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் அவரது தாய் இந்திராணி முகர்ஜி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த மகள் ஷீனா போராவை தனது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவின் உதவியுடன் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்தார். மேலும் ஷீனாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வழக்கில் இந்திராணி, கன்னா ஆகியோர் கடந்த வாரம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்திராணியின் முன்னாள் டிரைவர் ராய் குடிபோதையில் பாரில் ஷீனாவின் கொலை பற்றிய உளறியதால் தான் அவர் சிக்கினார்.

அமெரிக்கா
ஷீனா கொலை செய்யப்பட்ட பிறகு அவர் அமெரிக்கா சென்று அங்கு வசித்து வருவதாக இந்திராணி அனைவரிடமும் தெரிவித்து வந்துள்ளார். பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனாவின் காதலருமான ராகுலிடமும் இந்திராணி அவ்வாறு தான் தெரிவித்துள்ளார்.

ஷீனா
ஷீனா போராவை தான் கொலை செய்யவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் இந்திராணி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் என்ன கேட்டாலும் இதையே அவர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

வெறுப்பு
ஷீனா அமெரிக்காவில் உள்ளார். அவர் என் மீது உள்ள வெறுப்பால் தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தானாக முன்வந்து போலீசாரிடம் தெரிவிக்க மறுக்கிறார் என்று இந்திராணி விசாரணையின்போது கூறியுள்ளார்.

போலீசார்
ஷீனா போரா கொலை செய்யப்பட்ட நேரத்தில் மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற பயணிகளின் பெயர் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

மண்டை ஓடு
ஷீனாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து மண்டை ஓடு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். அது ஷீனாவின் மண்டை ஓடு என்று நம்பப்படுகிறது. மேலும் ஷீனாவின் உடலை எடுத்துச் சென்ற சூட்கேஸையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications