ஷீனா வழக்கு: இந்திராணியின் 3வது கணவரிடம் 12 மணிநேரம் துருவித் துருவி விசாரித்த போலீஸ்
மும்பை: ஷீனா கொலை வழக்கில் மும்பை போலீசார் இந்திராணியின் தற்போதைய கணவரான பீட்டர் முகர்ஜியிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணியின் தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜியிடம் மும்பை போலீசார் புதன்கிழமை விசாரணை நடத்தினர். பீட்டரிடம் 12 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்டமாக எழுத்துப்பூர்வமாகவும், இரண்டாவது கட்டமாக வாய் வார்த்தையாகவும் விசாரிக்கப்பட்டது.
பீட்டரை ஒரு அறையிலும், இந்திராணியை மறு அறையிலும் அமர வைத்து இருவரிடமும் 25 கேள்விகள் அடங்கிய வினாத்தாளை போலீசார் அளித்தனர். அந்த கேள்விகளுக்கு அவர்களுடைய பதில் ஒரே மாதிரியாக இருந்ததா என்று போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் பீட்டரிடம் பலவகையான கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

பணம்
பீட்டரிடம் அவரின் பண பரிமாற்றங்கள், முதலீடுகள், பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு இருக்கும் பங்குகள், இந்திராணி, ராகுல், ஷீனா, விதிக்கு எவ்வளவு பணம் அளித்தார் என்பது குறித்து போலீசார் கேள்வி எழுப்பினர்.

ஷீனா
குடும்ப உறுப்பினர்கள் குறித்து பீட்டரிடம் கேட்கப்பட்டது. மேலும் ஷீனாவை யார், எதற்காக கொலை செய்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

காதல்
உங்களின் மகன் ராகுல் முகர்ஜி ஷீனாவை காதலித்த விஷயம் தெரிய வந்தபோது என்ன செய்தீர்கள், ஷீனா திடீர் என மாயமானபோது உங்களுக்கு சந்தேகமே வரவில்லையா என்று போலீசார் பீட்டரிடம் கேட்டனர்.

இந்திராணி
நீங்கள் இந்திராணியின் மூன்றாவது கணவர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஷீனா இந்திராணியின் தங்கை அல்ல மகள் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? சித்தார்த் தாஸ் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளதை இந்திராணி உங்களிடம் தெரிவித்தாரா? கொலை நடந்த சமயம் நீங்கள் எங்கிருந்தீர்கள் என போலீசார் பீட்டரிடம் கேள்வி கேட்டனர். போலீசார் பீட்டரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications