சிமோகா தொகுதியில் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா பின்னடைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சிமோகா தொகுதியில் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கர்நாடக மாநில தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Shimoga: BJP state president Eswarappa lags in postal votes

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் சிமோகா தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிகிறது.

இந்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்று நாடே உற்று நோக்கியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் பிரார்த்தனை, யாகம் என நடத்தின.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karntaka BJP State president Eswarappa lags in postal votes in Shimoga constituency.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற