உச்சகட்ட மல்லுகட்டு...பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாக சிவசேனா மிரட்டல்!!
மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில் மகாராஷ்டிரா முதல்வரான பா.ஜ.க.வின் பட்னாவிஸோ, சிவசேனாவின் இந்த நாடகத்தை நாங்கள் சமாளித்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் பட்னாவிஸ் அரசுக்கும் சிவசேனா ஆதரவு தெரிவித்து ஆட்சியில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் மகாராஷ்டிராவின் கல்யான் டோம்பிவில் நகராட்சித் தேர்தலை முன்வைத்து இரு கட்சிகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். இத்தேர்தலில் 2 கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டுவதால் முட்டல் மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இதன் உச்சகட்டமாக மகாராஷ்டிராவின் சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் இதை முதல்வர் பட்னாவிஸோ நாடகம் என்று விமர்சித்தார்.
இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க.வின் இந்த அகம்பாவம் தொடர்ந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையும் எதிர்கொள்ள தயார் என்று சளைக்காமல் பட்னாவிஸ் கூறி வருகிறார்.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications