Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏலே பேதில போவ.. 1 ஸ்பூன் 810 ரூபாயா? கரண்டி வாங்கி கமிஷன் அடித்த ஆபீசர்ஸ்! பாஜக ஆளும் மபியில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் அங்கன்வாடி ஊழல் தான் தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, அதிக விலைக்கு பொருட்களை வாங்கி கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அங்கன்வாடிகளுக்கு குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு ஸ்பூன் 810 க்கும், கரண்டி 1348 ரூபாய்க்கும், குடிநீர் ஜக் 1247 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

ஊழல்கள் பலவகை இருக்கிறது. இதுவரை இந்தியா பல ஊழல்களை பார்த்து இருக்கிறது. கால்நடைகளுக்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் பல இருக்கிறது.

madhya pradesh scam bjp

தமிழகத்திலும் பல அரசியல்வாதிகள் ஊழல் காரணமாக சிறை சென்று வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் சிறிய சிறிய பொருட்களை பெரிய விலை கொடுத்து வாங்கியதாக கமிஷன் அடிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அடிக்கடி சிக்கி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தின் சிங்ரெளலி மாவட்டத்தில் அங்கன்வாடிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. அங்கு உள்ள 1500 அங்கன்வாடிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருட்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான டெண்டர் மத்திய அரசின் ஜெம் ஆன்லைன் மார்க்கெட் தளம் மூலம் ஜெய் மாதா தி நிறுவனத்திற்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் தான் மிகப்பெரிய அளவில் முறையீடு நடந்திருக்கிறது 1500 அங்கன்வாடிகளுக்கு 46 ஆயிரத்து 500 ஸ்பூன்கள், 62 ஆயிரம் கரண்டிகள், 3100 குடிநீர் ஜக்குகள் வாங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை தான் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஒரு ஸ்பூன் 810க்கும், ஒரு கரண்டி 1348 ரூபாய்க்கும், ஒரு குடிநீர் ஜக் 1247 ரூபாய்க்கும் வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 46,500 ஸ்பூன்கள் 3 கோடியே 76 லட்சத்திற்கும், 6200 கரண்டிகள் 83 லட்சத்திற்கும், 3100 குடிநீர் ஜக் 38 லட்சத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையால் இந்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அப்பட்டமான கொள்ளையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து இருக்கிறது. சிறிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது குறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான லோகேஷ் நாயக் கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கன்வாடி மோசடி குறித்து பேசி உள்ள அவர் எங்கள் வாழ்நாளில் இவ்வளவு விலை உயர்ந்த கரண்டியையோ குடிநீர் ஜக்கையோ பார்த்ததில்லை. அரசாங்கம் அதன் சொந்த ஆதரவாளர்களுக்கு டெண்டரை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக சிங்ரெளலி மாவட்டத்தில் அதிகாரிகள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் பணியில் இல்லாதது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் மூன்று மட்டுமல்ல ஏழு வகையான பாத்திரங்கள் வாங்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார். ஆனால் அது தொடர்பான பட்டியல் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிங்க் ரவுடி மாவட்டத்தில் அங்கன்வாடி பொருட்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது என கூறியிருக்கிறார் ​​அமைச்சர் விஸ்வாஸ் சாரங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+