டெல்லியில் மெட்ரோ ரயில், கழிவறையை தொடர்ந்து... ஏடிஎம்-ல் காதலர்களின் அத்துமீறல் அம்பலம்
டெல்லி: டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏடிஎம் மையங்களை காதல் வளர்க்கப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ லீக்காகி அது ஆபாச பட இணையதளத்தில் வெளியானது. லீக்கான சிசிடிவி வீடியோவை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்தனர்.
அதனைத் தொடந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது.
தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏடிஎம் மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏடிஎம் காதலர்கள்...
ஏடிஎம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு...
யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும் ஜோடிகளுக்கு இக்காட்சிகள் போலீசாரின் கண்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களின் பார்வைக்கும் சென்றடைகிறது என்ற அச்சத்தை உண்டாக்கி மேற்கொண்டு இது போன்ற அசிங்கங்களைத் தவிர்ப்பதற்காகவே இக்காட்சிகளை வெளியிட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அத்துமீறல்கள்...
போலீசார் வெளியிட்ட இக்காட்சிகள் குறிப்பிட்ட சில ஏடிஎம்களில் மட்டும் எடுக்கப் பட்டவை இல்லை என்பது தான் அதிர்ச்சிகரமான விஷயம். டெல்லியின் பெரும்பான்மையான ஏடிஎம் மையங்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறுவது கண்டறியப் பட்டுள்ளது.

கண்ணக் கட்டுதே...
இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களை சோதித்தால் இன்னும் பல இந்த லிஸ்டில் சேரும் என அஞ்சப் படுகிறது.

பாதுகாப்பான இடம்...
பொதுவாக ஏடிஎம் மையங்கள் நன்கு குளிரூட்டப்பட்டவை. கண்ணாடிக் கதவுகளிலும் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே நடப்பது தெரியாவண்ணம் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்கிறார்களாம் காதலர்கள்.

உடந்தை...
சில இடங்களில் ஏடிஎம் மைய காவலர்களே இத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாம்.

காதலர்களுக்கு காவலர்கள்....
காசை வாங்கிக் கொண்டு ஏடிஎம்மின் வெளியே ‘அவுட் ஆப் ஆர்டர்' போர்டை மாட்டி விட்டு காதலர்களை உள்ளே அனுப்பி விட்டு காவலுக்கு இருக்கிறார்களாம் சில வாட்ச்மேன்கள்.

எச்சரிக்கை....
இது போன்று பொது இடங்களைக் காதல் வளார்க்கப் பயன் படுத்தி அநாகரீகமாக செயல் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications