பெண் ஊழியரின் சேலையைப் பிடித்து இழுத்து தரக்குறைவாக நடந்த அதிகாரி.. பரபரப்பு வீடியோ
ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையை அதிகாரி ஒருவர் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லி: ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் ஊழியரின் சேலையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடந்த அதிகாரி குறித்து புகார் அளித்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் புகார் அளித்தவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெண் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி விமான நிலையம் அருகில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த 29ம் தேதி பெண் ஊழியர் ஒருவரிடம் அவரது உயர் அதிகாரி தரக்குறைவாக நடந்துள்ளார்.
ஓட்டலின் பாதுகாப்பு மேலாளராக இருக்கும் அந்த நபர் தனக்கு கீழ் பணியாற்றும் பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து தன்னுடன் இரவு தங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

பிறந்த நாளில் நடந்த அவமானம்
இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ள பாதிக்கப்பட்ட 33 வயது இளம்பெண், "அன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள், என்னை அவரின் அறைக்கு அழைத்த என்னுடைய பாஸ் கிரெடிட் கார்டை எடுத்து நீட்டி என்ன பரிசு வேண்டுமோ வாங்கிக்கொள் என்று கூறினார். என்னை அவருக்கு அருகில் அமரச்சொன்னார்.

தரக்குறைவாக நடந்த அதிகாரி
நான் மறுக்கவே, அவர் என்னுடைய சேலையை பிடித்து இழுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த அறையில் இருந்த மற்றொரு ஆண் பணியாளரையும் அறையை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டதோடு இரவு என்னை அவருடன் தங்கவும் வலியுறுத்தினார்.

பணிநீக்கிய நிர்வாகம்
இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்தின் எச்.ஆரிடம் புகார் அளித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். அடுத்த நாள் பணிக்கு வந்த போது என்னை எச். ஆரை சந்திக்கச் சொன்னார்கள். 45 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட பின்னர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

போலீசில் புகார்
இதனிடையே அதிகாரி என்னிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் நண்பர் மூலம் கிடைத்தது. இதன் அடிப்படையில் என்னுடைய கணவர் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசில் புகார் அளித்த பின்னர் அந்த அதிகாரியை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.
பெண் ஊழியர்கள் அதிர்ச்சி
பாலியல் தொந்தரவு கொடுத்து தரக்குறைவாக நடந்தது குறித்து புகார் தெரிவித்ததற்காக பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications