”அவர்கள்” எய்ம்ஸை கட்டமாட்டார்கள்.. செங்கல் மட்டுமே நடுவார்கள்! “அந்த” கலாச்சாரத்தை.. மோடி ஓபன் டாக்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விமான நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குறுக்கு வழி அரசியல் செய்பவர்கள் புதிய விமான நிலையங்களையும், எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் கட்ட மாட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தியோகர் மாவட்டத்தில் விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
657 ஏக்கர் பரப்பளவில் ரூ.401 கோடி மதிப்பில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்டில் பிரதமர்
முன்னதாக ஜார்க்கண்ட் வந்த அவருக்கு 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் நின்று பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து துயோகருக்கு சென்ற பிரதமர் மோடி, பாபா பைத்யநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் விமான நிலையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் கலாச்சாரம்
அந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தியோகரில் விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அதை திறந்து வைக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. முன்பெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 2-3 அரசுகள் மாறிய பின் அடிக்கல் நாட்டப்படும். அதன் பின்னர் 2-3 அரசுகள் மாறிய பிறகே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இன்று நாம் அந்த கலாச்சாரத்தை மாற்றி இருக்கிறோம்.

புதிய கலாச்சாரம்
தற்போது நாம் வேலை செய்யும் கலாச்சாரத்தை, அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளோம். அடிக்கல் நாட்டியவர்களே அந்த திட்டத்தை திறந்து வைக்கும் மாடலை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியா ஆன்மீகம் மற்றும் புனித தலங்களின் மண். யாத்திரைகள் நம்மை நல்ல சமுதாயமாக, நல்ல நாடாக வடிவமைத்து இருக்கின்றன. தியோதரை பாருங்கள். இங்கு சிவன் மட்டும் இல்லை, சக்தியும் இருக்கிறது. கங்கை நீருடன் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் தியோதருக்கு வருகை தருகின்றனர்.

குறுக்குவழி அரசியல்
ஆன்மீகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நாம் நவீன வசதிகளுடன் கூடிய முதலீடுகளை கொண்டு வருகிறோம். பிரபலமடையும் நோக்கில் மேற்கொள்ளப்படும் குறுக்குவழி அரசியல் நாட்டை அழித்துவிடும். யாரெல்லாம் குறுக்குவழி அரசியலை செய்கிறார்களோ, அவர்கள், புதிய விமான நிலையங்களையோ, நெடுஞ்சாலைகளையோ, எய்ம்ஸ் மருத்துவமனைகளையோ கட்டமாட்டார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications