சித்தராமையாவுக்கு அணிவித்த மாலையில் பேட்டரி, பல்புகள்! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அக்கட்சியை சேர்ந்த ஒருவர் அணிவித்த மாலையில், சென்சார் லைட் மற்றும் பேட்டரி இருந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையளிக்க பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலகம் தலைமைச் செயலகமான விதானசவுதாவின் மூன்றாவது மாடியிலுள்ளது.

நேற்று சித்தராமையாவை சந்திக்க வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மேயர் ஒருவர், சித்தராமையாவுக்கு மாலை அணிவித்துள்ளார். இந்த பிறகுதான், எதேர்ச்சையாக சித்தராமையா, பூ மாலையை கவனிக்கும்போது, அதில் சென்சார் விளக்கு மற்றும் அதை இயக்குவதற்காக பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக மாலையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். தகவல் அறிந்த பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஹரிசேகரன் கூறுகையில், "விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கையளிக்கப்படும்" என்றார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க மூன்றடுக்கு பாதுகாப்பு அமைப்பு உள்ளது. முதல்கட்டமாக மெட்டல் டிடெக்டர் சோதனையும், இரண்டவது கட்டமாக ஸ்கேனிங் சோதனையும், முதல்வர் அறைக்குள் செல்வதற்கு முன்பாக மீண்டும் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடத்தப்படும். ஆனால், மூன்று கட்ட சோதனையையும் தாண்டி பேட்டரி மற்றும் பல்பு முதல்வர் அறையை சென்றடைய, பாதுகாப்பு போலீசாரின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, 2 முறை, சித்தராமையா பயணிக்கும் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறுகள் கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பயணங்கள் ரத்தாகிய சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது தலைமைச் செயலகத்திலேயே பேட்டரி மற்றும் பல்பு அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications