அமைதிப் பூங்காவாக திகழ்கிறது கர்நாடகம்... முதல்வர் சித்தராமையா சுதந்திர தின உரை
பெங்களூரு : எவ்வித வன்முறை, மதவாத சண்டைகள் இன்றி, கர்நாடக மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, மானக்க்ஷா அணிவகுப்புத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் மாநில மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது...

இந்த நன்னாளில் நமது சுதந்திரத்திற்காக தீரமுடன் போராடி உயிர்த்தியாகம் செய்த முன்னோர்களை நன்றியுடன் நினைத்துபார்க்கதவறக்கூடாது. சுதந்திரதினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாது, மொழி,கலாசாரம், மத வேறுபாடுகளை துறந்து நாம் அனைவரும் ஒன்று என்ற சிந்தனையை விதைக்க வேண்டும். நமது தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 90 ஆண்டுகள் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாது, சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை கட்டமைத்திருந்தனர்.
சுதந்திரபோராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மாகாந்தி, கிராம சுயாட்சியை காண விழைந்தார். மதசார்பின்மை மற்றும் தற்சார்பின் அடித்தளத்தில் எழுச்சிபெற்ற இந்தியாவை காணவிரும்பினார் நேரு.
முற்போக்கான அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், அரசியல் சுதந்திரத்தை காட்டிலும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உணர்த்தினார்.
இந்த எண்ணங்கள் அனைத்தும் நமது அரசியலமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. நமது தலைவர்களின் கனவுகள், எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொண்டு ஆக்கப்பூர்வமான நடையை எடுத்துவைப்பது நல்லது.
கடந்த 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நமது நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. எனினும், வளர்ச்சியின் பலன் சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் சென்று சேரும் போதுதான் நமது சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். எந்த வன்முறை சம்பவங்களும், மதவாத சண்டைகளும் இல்லாமல் கர்நாடகமாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தீவிரவாத செயல்களை தடுக்க பெங்களூருவில் மத்திய கட்டளை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 10 மகளிர் காவல்நிலையங்கள் உள்பட 30 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத, தேச விரோத செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனது சுதந்திர தின உரையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications