டெல்லியில் ராணுவ வீரரின் மனைவியை சீரழித்த திருமணம் நிச்சயமான எய்ம்ஸ் டாக்டர்
டெல்லி: கெஜ்ரிவால் ஆட்சி செய்யும் டெல்லியில் ராணுவ வீரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூர்கா ரெஜிமென்ட்டில் ராஜஸ்தானில் பணிபுரியும் ராணுவ வீரரின் 25 வயது மனைவிக்கு பியூட்டி பார்லரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் கடந்த 20ம் தேதி தலைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிக்கிமைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை டெல்லி அழைத்து வந்தவர்கள் அவரை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி டெல்லி ஹவ்ஸ் காஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மெஹர் தேஸின்(27) வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
மெஹர் தனது வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து தனது பெண் பயணி ஒருவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி அழுவதாக தெரிவித்தார். இதையடுத்து தான் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் டாக்டர் மெஹர், அந்த பெண்ணை டெல்லிக்கு அழைத்து வந்த சுமன்(37), அவரது கணவர் தீபக்(40), அவர்களின் உதவியாளர்கள் தரம்வீர்(32), கமல்(31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
டாக்டர் மெஹர் தேஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. விசாரணையில் போலீசாரிடம் டாக்டர் கூறுகையில்,
பணத்திற்கு யாராவது பெண்ணை அழைத்து வர முடியுமா என்று பாலியல் புரோக்கரிடம் கேட்டேன். அவரும் என்னிடம் ரூ.9 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒரு பெண்ணை என் வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த பெண் இரவு முழுவதும் என் வீட்டில் இருந்தார். விருப்பப்பட்டு தான் என்னுடன் உறவு கொண்டார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications