இயக்குனர் ஷங்கரின் முதல்வனும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும்
சென்னை: இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் வரும் முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே சில ஒற்றுமை உள்ளது.
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக வரும் காட்சிகள் அதிரடியாக இருக்கும்.
இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஷங்கரின் முதல்வனுக்கும் இடையே உள்ள சில ஒற்றுமைகளை பார்ப்போம்.

ஆட்டோ, மெட்ரோ
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக பதவி ஏற்க அர்ஜுன் ஆட்டோவில் வந்து இறங்குவார். கெஜ்ரிவாலோ மெட்ரோ ரயிலில் பதவி ஏற்கும் விழாவுக்கு சென்றார்.

ஊழல்
ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் தனது பதவிக்காலம் குறுகிய நேரமே என்று தெரிந்தும் ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராடுவார். கெஜ்ரிவாலும் தனது பதவிக் காலம் குறைவானதே என்பதை தெரிந்தும் ஊழலுக்கு எதிராக போராடி வருகிறார்.

சஸ்பெண்ட்
பதவி ஏற்ற சிறிது நேரத்தில் அர்ஜுன் ஆயிரக்கணக்கான ஊழல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வார். இதே போல் கெஜ்ரிவால் பதவியேற்ற 10 நாட்களுக்குள் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் 3 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு 800 பேரை டிரான்ஸ்பர் செய்தார்.

திடீர் விசிட்
முதல்வன் படத்தில் அர்ஜுன் சேரி பகுதிகளுக்கு திடீர் என்று சென்றதுடன், ரேஷன் கடைக்கு சென்று ஊழல் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்வார். டெல்லி மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா வீடு இல்லாதவர்கள் இரவில் தங்கும் இடங்களுக்கு திடீர் என்று சென்றுள்ளார். முதல்வன் சூப்பர் ஹிட்டானது. கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications