ஷாருக், ஆமீர் சொந்த கருத்து.. இந்தியாவில் சகிப்புத்தன்மை உள்ளது: இந்தியரான பாக். பாடகர் பெருமிதம்
டெல்லி: பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் அட்னன் சமிக்கு இந்தய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை இருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல ஹிந்தி திரைப்பட பாடகர் அட்னன் சமி கடந்த 2001ம் ஆண்டு ஒரு ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார்.
இவர் தொடர்ந்து தன் விசாவை புதுப்பித்து இந்தியாவில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட இவரது பாஸ்போர்ட் காலாவதியானது.
இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்தது. இதையடுத்து பாடகர் அட்னன் சமி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கூறிவந்தன.

குடியுரிமை
இந்தநிலையில் தனக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என பாடகர் அட்னன் சமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தற்போது மத்திய அரசு இந்திய குடியுரிமையை அட்னன் சமிக்கு வழங்கி உள்ளது.

லாகூர்வாசி
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "அட்னன் சமி வெள்ளிக்கிழமை முதல் இந்தியக் குடிமகன் ஆவார்' என்றனர். 46 வயதாகும் அட்னன் சமி, பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர் ஆவார்.

பாடல்கள்
கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியா வந்து அட்னன் சமி பாடிய "கபி தோ நஜர் மிலாவ்', "லிப்ட் கரா தே' ஆகிய 2 பாடல்களும் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. அதேபோல், ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் அண்மையில் வெளியான "பஜ்ரங்கீ பைஜான்' படத்திலும் அவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சகிப்புத்தன்மை
ஷாருக்கான், ஆமீர்கான் போன்றோர் சகிப்புத்தன்மை இல்லை என்பதாக பேசியது குறித்து நிருபர்கள் அட்னந் சமியிடம் கேட்டபோது, இந்தியாவில் சகிப்புத்தன்மை இருப்பதாகவும், தான் என்றுமே சகிப்பின்மையை எதிர்கொண்டதில்லை என்றும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம், எனக்கு சகிப்பின்மை போன்ற நிகழ்வு நடந்திருந்தால், நான் இந்திய குடியுரிமையே பெற்றிருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications