சர்ச்சையில் சிக்கிய பாடகி சித்ரா.. அயோத்தி ராமர் கோவில் வீடியோவால் கடும் எதிர்ப்பு.. என்னாச்சு?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாகவும், ராம மந்திரத்தை உச்சரிக்க கூறியும் வீடியோ வெளியிட்ட பாடகி கேஎஸ் சித்ராவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தொடர்ந்து அவரை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விவகாரம் விவாதமாகி உள்ளது. அப்படி பாடகி கேஎஸ் சித்ரா தனது வீடியோவில் என்ன கூறினார்? வாங்க பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. இந்த பூஜைகள் 22ம் தேதி மாலை வரை நடைபெற உள்ளது. இதனால் அயோத்தி நகரமே தற்போது களைகட்டியுள்ளது.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட பாடகி கேஎஸ் சித்ரா கடும் விமர்சன்ததை எதிர் கொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்பட பல மொழிப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி புகழ் பெற்றவர் கேஎஸ் சித்ரா. மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார். பாடல்கள் மூலம் காந்த குரலால் கவர்ந்து இழுத்த கேஎஸ் சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 தேசிய விருதுகள் வென்றுள்ளார். 36 திரைப்பட விருதுகளையும், பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார். மேலும் இவர் ‛தென்னகத்தின் நைட்டிங்கேல்' எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியாகும் சிங்கர்ஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாடகி கேஎஸ் சித்ராவின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‛‛ஜனவரி 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது அனைவரும் ராமர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 'ஸ்ரீராம, ஜெயராம, ஜெய ராம' என்ற மந்திரகத்தை கூற வேண்டும். அதேபோல் அனைவரும் வீட்டில் ஐந்து திரி தீபம் ஏற்ற வேண்டும். மேலும் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். லோக சமஸ்தா சுகினோ பவந்து'' என தெரிவித்துள்ளார்.
கேஎஸ் சித்ராவின் இந்த வீடியோவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கேஎஸ் சித்ராவின் இந்த பதிவு என்பது விவாதமாகி உள்ளது. குறிப்பாக பாடகர் சூரஜ் சந்தோஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‛‛மசூதியை இடித்து கோவில் கட்டப்பட்டு இருக்கும் வரலாற்றை மறந்துவிட்டு "லோக சமஸ்தா சுகினோ பவந்து" என கூறுவோரின் அப்பாவித்தனம் என்பது ஹைலைட்டாக இருக்கிறது. எத்தனை சிலைகள் ஒவ்வொன்றாக உடையப்போகிறது? இன்னும் எத்தனை கேஎஸ் சித்ராக்கள் தங்களின் உண்மையான நிறத்தை காட்டுவார்கள்? இது பரிதாபம்'' என தெரிவித்துள்ளார். அதேபோல் பலரும் கேஎஸ் சித்ராவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் எழுத்தாளர் இந்து மேனன் தனது முகநூல் பக்கத்தில், ‛‛இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வலிகள், அவர்களின் ரத்தத்தின் மீது இருந்து மந்திரம் முழங்கினாலும் ராமனும் ராமனும், விஷ்ணுவும் வரப்போவது போவது இல்லை. 5 லட்சம் விளக்குகளை ஏற்றினாலும் உங்களினம் மனதில் ஒளி என்பது வராது. குரலின் காரணமாகவே நைட்டிங்கேல் என்று உலகம் நம்பியது. ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு 'போலி நைட்டிங்கேல்' என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications