Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவு எளிமை பாருங்க! இவர்கள் தான் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகியின் சகோதரிகள்! பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரிகள் உத்தரகாண்ட்டில் உள்ள கோவிலில் சந்தித்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இவர்கள் 2 பேருமே தாங்கள் பிரதமர், முதல்வரின் சகோதரிகள் என்ற எந்த பந்தாவும் இன்றி சாதாரணமாக பேசி கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இமயமலையையொட்டி இந்த மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Sisters of PM Modi and Uttar Pradesh CM Yogi Adityanath meets in Uttarakhand Temple

மேலும் உத்தரகாண்ட்டில் உள்ள கோவில்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் பகுதியில் உள்ள கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரியும் சந்தித்து கொண்டனர்.

Sisters of PM Modi and Uttar Pradesh CM Yogi Adityanath meets in Uttarakhand Temple

அதாவது பிரதமர் மோடியின் சகோதரி வசந்தி பென் தனது கணவருடன் உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் அருகே பவுரி பகுதியில் உள்ள நீலகண்ட மகாதவ் கோவிலுக்கு சென்றார். தற்போது சவான் புனித மாதம் என்பதால் அவர் தனது கணவருடன் சிவனை வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் கொல்காரி கிராமத்தில் உள்ள பார்வதி கோவிலுக்கு சென்றனர். அங்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசிதேவியை பிரதமர் மோடியின் சகோதரி வசந்தி பென் சந்தித்து பேசினார்.

Sisters of PM Modi and Uttar Pradesh CM Yogi Adityanath meets in Uttarakhand Temple

இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிரித்தபடி பேசி பரஸ்பரம் நலம்விசாரித்து கொண்டனர். தனது சகோதரர் பிரதமர் என வசந்தி பென்னும், தனது சகோதரர் உத்தர பிரதேச முதல்வர் என சசிதேவியும் காட்டிக்கொள்ளாமல் இருவரும் சர்வ சாதாரணமாக நடந்து சென்று கோவிலில் தரிசனம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+