நொய்டாவில் நக்சலைட் தளபதி உள்பட 6 பேர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட் முக்கிய தளபதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட் மாநிலம் லேத்கர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் தளபதி பிரதீப் சிங் கர்வார் உள்பட 6 முக்கிய நக்சலைட்டுகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மாநில போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நக்சலைட் தளபதி பிரதீப் சிங் கர்வாரை தலைக்கு 5 லட்சம் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக உத்தரபிரதேச மாநில போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications