6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது
டெல்லி: நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.
இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி மோசமான சரிவை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.

இதற்கு முன்பு
கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும். தற்போது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது.

மிக மோசம்
கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் 8 மூல நிறுவனங்களின் உற்பத்தியும் 5.8% ஆக குறைந்துள்ளது.

என்ன பேசினார்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லோக்சபாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை. பொருளாதார பின்னடைவு என்னும் நிலை உருவாகவில்லை. அது இனியும் உருவாகாது. இந்தியாவின் ஜிடிபி நன்றாகவே இருக்கிறது.

ஆனால் இல்லை
இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்தது. 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% ஆக உள்ளது. இதனால் ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். வேலைவாய்ப்பு போதுமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரின் பேச்சுக்கு மாறாக தற்போது இந்தியாவின் ஜிடிபி மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications