மும்பை புறநகர் ரயில் கூட்ட நெரிசலில் தவறி விழுந்த இளைஞர் பரிதாப பலி!
மும்பை: மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக் கொண்ட வந்த இளைஞர் ஒருவர் பிடிமானம் இல்லாமல் தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

விசாரணையில் அந்த இளைஞர் தீம்பிவில்லி பகுதியை சேர்ந்த பவேஷ் என்பதும், சிஎஸ்டியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு தினசரி ரயிலில் பயணம் செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பவேஷ் தவறி விழும் காட்சியை ரயிலில் பயணம் செய்த சக பயணி ஒருவர் தனது செல்பேசியில் படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், ஒருவர் உயிரிழக்கும் நிலையில் கூட அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதா என்று எதிர்ப்புகளும் பரவி வருகின்றன.
மும்பை புறநகர் ரயில்கள் எப்போதுமே கூட்டமாக இருக்கும். அதுவும் காலை அலுவலக நேரங்களில் ஒரு சிறிய இடத்தில் 8 பேர் நின்று கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவிற்கான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications