நாட்டுக்கு உழைக்கவே நேரமில்ல..- இந்திப் படத்திலிருந்து விலகிக் கொண்ட ஸ்மிருதி இரானி!
டெல்லி: ஆல் ஈஸ் வெல் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடிக்க நேரம் இல்லை என்று கூறி விலகிக் கொண்டார்.
ஸ்மிருதி இரானி முன்னாள் மற்றும் நடிகை. ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர்.
2003-ல் பாஜகவில் இணைந்த அவர், கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார்.

ஆனாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கினார் மோடி.
தேர்தலில் போட்டியிடும் முன் உமேஷ் சுக்லாவன் இயக்கத்தில் ‘ஆல் இஸ் வெல்' எனும் இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஸ்மிருதி. இதில் அபிஷேக் பச்சன், அசின் இணைந்து நடத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகபூருக்கு ஜோடியாக ஸ்மிருதி இரானி நடித்து வந்தார்.
இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நடிகையாக இருந்த ஸ்மிருதி மத்திய அமைச்சராகிவிட்டார்.
ஆனாலும் விடுமுறை காலங்களில் அவர் நடிக்க முயற்சித்து வந்தார். அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் அந்த படத்தில் இருந்து தற்போது ஸ்மிருதி இரானி விலகிக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஆல் ஈஸ் வெல் படத்தில் எப்படியாவது நடித்து முடித்துவிட முயன்றேன். ஆனால் முடியவில்லை. நான் இந்த நாட்டுக்காக உழைக்க வேண்டி உள்ளது.
என்னிடம் இருந்தும், இந்த அரசிடம் இருந்தும் இந்த நாடு அதிகமாக எதிர்பார்க்கின்றன. நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களை நான் ஏமாற்ற முடியாது.
என்னுடைய விலகலால் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிரமம் புரிகிறது.
வார இறுதி நாட்களிலாவது என்னுடைய பகுதிகளை நடித்து கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் திட்டமிட்டப்படி அது நடக்கவில்லை. எனவேதான் விலகுகிறேன்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications