சீனுக்கு வந்த ஸ்மிருதி இரானி.. சூதாட்ட செயலி ஓனர்கிட்ட சத்தீஸ்கர் முதல்வர் பணம் வாங்கியதாக குமுறல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் அங்கு பிரச்சாரம் அனல் பறக்கிறது. மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து ரூ.508 கோடி தேர்தல் செலவுகளுக்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியையும் பாதிக்கும். அதேபோல காங்கிரசுக்கும் இந்த தேர்தல் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியில் காங்கிரஸ் இருக்கிறது. எனவே ஆட்சி அதிகாரத்தை இந்த முறை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மீது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அதாவது, "மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ.508 கோடி தேர்தல் செலவுகளுக்காக முதலமைச்சர் பூபேஷ் பாகல் பெற்றிருக்கிறார்" என்று கூறியுள்ளார். வடமாநிலங்களில் மகாதேவ் சூதாட்ட செயலி மிகவும் பிரபலமானதாகும். இது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியது. ரெய்டில் ரூ.5.86 கோடி கைப்பற்றப்பட்டதோடு ஆசிம் தாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவரது மொபைல்களை ஆய்வு செய்தபோது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் சோனி என்பவர் அனுப்பிய மெயில்கள் மூலம், சுமார் ரூ.508.6 கோடி பணம் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி இந்த குற்றச்சாட்டுகளை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, செய்தியாளர் சந்திப்பில், "காங்கிரஸ் ஹவாலா பணத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் மாநிலத்தின் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு பூபேஷ் பாகல், ஹவாலா பணம் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களை மக்கள் பார்த்ததே இல்லை" என்று இரானி குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முழமையாக மறுத்திருக்கிறது.
பூபேஷ் பாகலின் புகழை கெடுக்கும் விதமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், மக்கள் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications