நான் எப்படி வேலை பார்க்கிறேன்னு மட்டும் பாருங்க... சர்ச்சை குறித்து ஸ்மிருதி இராணி
டெல்லி: எனது படிப்பு குறித்து கவலைப்படாதீர்கள். நான் எப்படி வேலை செய்கிறேன், எப்படி செயல்படுகிறேன் என்பதை மட்டும் வைத்து என்னை எடை போடுங்கள் என்று கல்வி தகுதி சர்ச்சை குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

பட்டப்படிப்பு கூட படிக்காத ஸ்மிருதிக்கு உயர் கல்வி நிறுவனங்களை அகப்படுத்தியிருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறை என்ற மிக முக்கிய துறையை கொடுத்திருப்பது குறித்து காங்கிரஸ் சர்ச்சை கிளப்பியுள்ளது.
பிளஸ்டூ வரை படித்தவரைப் போய் எப்படி இந்த முக்கியமான துறைக்கு அமைச்சராக்கலாம் என்றும் அது சாடியுள்ளது. இதுதொடர்பாக பதிலுக்குப் பதில் அதற்குப் பதில் என்று குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த ஸ்மிருதி தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களிடம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நான் எப்படி செய்கிறேன் என்பதையும், ஒரு முக்கியத் துறையின் அமைச்சராக நான் எப்படி செயல்படுகிறேன் என்பதையும் மட்டுமே பார்த்து எடை போடுங்கள் என்பதுதான். எனது வேலையை மட்டும் பாருங்கள் என்று மட்டும் அனைவரிடமும் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் 2004 மற்றும் 2014 லோக்சபா தேர்தல்களில் மாறுபட்ட ஆவணங்களை தனது வேட்பு மனுவில் இணைத்திருப்பது குறித்த சர்ச்சை குறித்து அவர் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வேலையை சரிவர செய்ய விடாமல் என்னை திசை திருப்பவே இதுபோன்ற சர்ச்சைகள் கிளப்பி விடப்பட்டுள்ளன. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யவே நான் விரும்புகிறேன். அதிலிருந்து நான் திசை திரும்ப மாட்டேன் என்று மட்டும் கூறினார் ஸ்மிருதி.
2004 தேர்தலின்போது ஸ்மிருதி டெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தான் 1996ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைத் தொடர்பு கல்வி மூலமாக பிஏ படித்திருந்ததாக கூறியிருந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில்,அதே பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்ததாக கூறியுள்ளார் ஸ்மிருதி இராணி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications