ஒரே இந்திய அரசியல்வாதி.. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவை ஃபாலோ செய்யும் ஸ்மிரிதி இராணி!
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தை பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி பின்பற்றுவது பிரச்சனையாகி இருக்கிறது.
டெல்லி: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தை பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி பின்பற்றுவது பிரச்சனையாகி இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூர்ஜ்வாலா குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது.
பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேனல் 4 நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு
ரன்தீப் சிங் சூர்ஜ்வாலா அளித்த பேட்டியில் ''இந்தியாவிலேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பது பாஜக கட்சி மட்டும்தான். இந்த முறை அவர்கள் மோசமாக மாட்டிக் கொண்டார்கள். பாஜக, ஐக்கிய ஜனதா தளம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா மூன்றும் கூட்டணி அமைத்து இதில் மோசடி செய்து இருக்கிறார்கள்'' என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

கேஸ் போடுங்கள் பார்க்கலாம்
மேலும் ''இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று பொய் சொல்ல பார்க்கிறார்கள். எங்களுக்கு இதில் எந்த கவலையும், பயமும் இல்லை. அவர்களுக்கு பயம் இல்லை என்றால், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளையின் நிறுவனர்களை கைது செய்ய முடியுமா?. இதில் பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு பெரிய தொடர்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சாதகம்
மேலும் ''இந்தியாவில் பாஜக கட்சி நிர்வாகிகளும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். ''மைகவ்'' என்ற இந்திய அரசின் இணையதளத்தை நடத்தும் அரவிந்த் குப்தா கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் சஞ்சய் ஜோஷி 2011லேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் தலைவரை சந்தித்துள்ளார்.'' என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பின்தொடரும் ஸ்மிரிதி இராணி
முக்கியமாக ''இந்தியாவில் ஒரே ஒரு அரசியல் தலைவர் மட்டும்தான் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பக்கத்தை பின்தொடருகிறார். அது வேறு யாரும் இல்லை. பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இராணி மட்டுமே. பாஜக கட்சி அந்த அளவிற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கிறது'' என்றுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications