என்னை 'டியர்' என அழைப்பது சரியல்ல... டுவிட்டரில் சீறிய ஸ்மிரிதி இரானி !
டெல்லி: டுவிட்டரில் ‘டியர்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கும் பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் சவுத்ரிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது.
பீகார் கல்வித்துறை அமைச்சர் சவுத்ரி, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை டுவிட்டரில் தொடர்பு கொண்டு "டியர் ஸ்மிரிதி இரானி எப்போது நாம் புதிய கல்விக் கொள்கையை பெற உள்ளோம்? உங்களுடைய காலண்டரில் 2015 எப்போது முடிகிறது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தகவலில் சவுத்ரி ‘டியர்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு ஸ்மிரிதிக்கு சரியாகப் படவில்லை, ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல' என சுட்டிக்காட்டி பதில் டுவிட் செய்து உள்ளார்.
அவருடைய எதிர்ப்புக்கு சவுத்திரி பதிலளிக்கையில் "இதில் அவமரியாதை ஒன்றும் கிடையாது, பணி ரீதியிலான இமெயில்கள் டியர் என்றுதான் தொடங்கும். எனவே, அப்படி தொடங்கி இருந்தேன்'' என்றார்.
அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘அசோக் சவுத்ரி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல்தொடர்புகள் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்'' என பதில் அளித்திருந்தார்.
அதன் பின்னரும் சவுத்ரி பதில் டுவிட் செய்ததுடன், தனது கேள்விக்கு ஸ்மிரிதி இன்னும் பதில் அளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். டுவிட்டரில் இவர்களின் வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications