32 ஆண்டுகளில் சுப்பிரமணியத்தை 74 முறை தேடி வந்து பழிவாங்கும் நல்லப் பாம்பு.. அதிர வைக்கும் செய்தி

Subscribe to Oneindia Tamil

அமராவதி: 32 ஆண்டுகளில் 74 முறை நல்லப் பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அது போல் பாம்புக்கு ஏதேனும் துரோகம் செய்துவிட்டால் அது ஏழு ஜென்மத்திற்கு விடாமல் துரத்தி பழி வாங்கும் என்பதை சினிமாக்களில் பார்த்துள்ளோம்.

ஆனால் பாம்பு எப்போதாவது பழி வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை தெரியவில்லை. ஆனால் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் உள்ள நபரின் கதையை கேட்டால் பாம்புகள் பழிவாங்கும் என கருதும் அளவுக்கு உள்ளது.

சித்தூர் மாவட்டம்

சித்தூர் மாவட்டம்

ஆம், ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவரைத்தான் நல்லப் பாம்புகள் காரணமே இல்லாமல் பழி வாங்குகிறதாம். இவரது 45 வயதில் ஒரு முறை இரு முறை 72 முறை இவரை பாம்பு கடித்துள்ளதாம்.

பாம்பு கடி

பாம்பு கடி

கடந்த 32 ஆண்டுகளாக இதே போல் நல்லப் பாம்புகள் விடாமல் எந்த காரணமுமின்றி பழி வாங்கி வருகிறதாம். இவர் 5ஆம் வகுப்பு படித்த போது முதல் முறையாக இவரை பாம்பு கடித்தது. இதற்கு அடுத்து ஆண்டுக்கு இருமுறை சுப்பிரமணியத்தை தேடி வந்து இந்த பாம்பு கடித்து விடுகிறது. சொந்த ஊரை விட்டு பெங்களூருக்கு வேலைக்காக சென்றார். அங்கும் பாம்பு கடிக்குள்ளானார்.

பாம்பு

பாம்பு

இந்த முறை அமாவாசை தினத்தன்று ஒரு பாம்பு என் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் பயந்து கொண்டு வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார். இதே போன்ற சம்பவம் 32 ஆண்டுகளாக நடைபெறுகிறதாம். எனக்கு இது புதிதாக இருக்கிறது. எதற்காக இந்த பாம்புகள் என்னை பழி வாங்குகின்றன என்பது தெரியவில்லை.

50 ஆயிரம் ரூபாய்

50 ஆயிரம் ரூபாய்

பாம்புகள் மீதான அச்சத்தால் நான் வீட்டை விட்டு எங்குமே செல்வதில்லை. விவசாயியான எனக்கு ஆண்டுதோறும் மருத்துவச் செலவாக 50 ஆயிரம் ரூபாயை செலவிட மிகவும் கடினமாக இருக்கிறது என்றார். இதுகுறித்து பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் ரகுராம் கூறுகையில் பாம்புகளுக்கு ஞாபகச் சக்தி என்பது கிடையாது. அது எப்படி ஒருவரை காரணமே இல்லாமல் தேடி வந்து கடிக்கும் என வினவினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+