உ.பியில் மாயமான ஸ்னாப்டீல் பெண் ஊழியர் ஹரியானாவில் கண்டுபிடிப்பு: என்ன தான் நடக்கிறது
டெல்லி: காசியாபாத்தில் காணாமல் போன ஸ்னாப்டீல் பெண் ஊழியர் தீப்தி சர்னா ஹரியானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் தீப்தி சர்னா(24). குர்காவ்னில் உள்ள ஸ்னாப்டீல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த புதன்கிழமை பணிமுடிந்து அவர் மெட்ரோ ரயிலில் காசியாபாத் வந்துள்ளார்.

இரவு 8.30 மணிக்கு அவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காசியாபாத் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் ஏறியதும் காசியாபாத் பேருந்து நிலையத்தில் அவருக்காக காத்திருந்த தந்தை நரேந்திர சர்மாவுக்கு போன் செய்துள்ளார். அதன் பிறகு அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.
தீப்தி பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. அவர் மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் தீப்தியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தீப்தி ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டில் இருப்பது தெரிய வந்து உத்தர பிரதேச மாநில போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
முன்னதாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர் அனுஸ்ரீ (22) மாயமாகி அருகில் உள்ள மாவட்டத்தில் நிலை குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications