பி.டெக். மாணவருக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க ஸ்னாப்டீலுக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு
சன்டிகர்: பஞ்சாபில் பி.டெக் படித்து வரும் மாணவர் ஒருவருக்கு ஐபோன் 5எஸ்-ஐ ரூ.68க்கு அளிக்குமாறு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வருபவர் நிகில் பன்சால். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்னாப்டீலில் ஐபோன் 5எஸ் ரூ.68க்கு விற்பனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை பார்த்த நிகில் ஒரு ஐபோனை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஸ்னாப்டீல் ஐபோனை அளிக்கவில்லை. இதையடுத்து அவர் சங்கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகினார். அவரது வழக்கை விசாரித்த மன்றம் நிகிலுக்கு ரூ. 68க்கு ஐபோன் 5எஸ்ஸை வழங்க வேண்டும், மேலும் அவர் வழக்கு தொடர்ந்ததற்காக செலவு செய்ததால் ரூ.2 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்னாப்டீலுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்னாப்டீல் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தை அணுகியது. ஸ்னாப்டீலின் மனு குறித்து விசாரித்த தீர்ப்பாணையம் கடந்த 12ம் தேதி தீர்ப்பு அளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐபோன் 5எஸ் ரூ.68க்கு விற்பனை என்று தவறாக இணையதளத்தில் அறிவிப்பு வெளியானதாக ஸ்னாப்டீல் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
அறிவித்தபடி நிகில் பன்சாலுக்கு ஐபோன் 5எஸ்ஸை ரூ.68க்கு ஸ்னாப்டீல் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் நிகிலுக்கு ஐபோனை ரூ.68க்கு அளிக்க மறுத்ததற்காக ஸ்னாப்டீல் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications