கொடூரத்தின் உச்சம்! 15 வயது சிறுமி 3 முறை விற்பனை.. பல தடவை பலாத்காரம்! சினிமாவை மிஞ்சம் கொடுமை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மூன்று முறை விற்பனை செய்யப்பட்டு, பல முறை பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் இப்போது +2 தேர்வை முடித்துள்ளார். அனைவரும் 16, 17 வயதில் முடிக்கும் +2 தேர்வை இந்த பெண்ணால் 22 வயதில் தான் முடிக்க முடிந்தது.

அதற்கு காரணம் அந்த பெண் நான்கு மாதங்களில் மூன்று முறை விற்பனை செய்யப்பட்டு, பல முறை பலாத்காரம் செய்யப்பட்டார். இப்போது தான் அந்த பெண் மெல்ல மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்.
கொடூரத்தின் உச்சம்! 15 வயது சிறுமி 3 முறை விற்பனை.. பல தடவை பலாத்காரம்! சினிமாவை மிஞ்சம் கொடுமை

சிறுமி

சிறுமி

அந்த பெண் 15 வயதாக இருந்த போது, அதாவது 2015இல் அந்த சிறுமி மேற்கு வங்கத்தில் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அப்போது சமூக வலைத்தளம் மூலம் ராகுல் என்ற நபருடன் அச்சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பொதுவாகப் பேசத் தொடங்கிய நிலையில், விரைவில் அந்த நபர் காதலிப்பதாகக் கூறி உள்ளார். இதையும் அந்த சிறுமி நம்பியுள்ளார். அப்படித்தான் ஒரு நாள் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி, ராகுலைப் பார்க்கச் சென்றுள்ளார்.

கடத்தல்

கடத்தல்

இருவரும் புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்றெல்லாம் கூறிய ராகுல், அந்த சிறுமியை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாபுகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு நிமிடத்தில் வந்துவிடுவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் மீண்டும் வரவே இல்லையாம். அதன் பின்னர் தான் அந்த சிறுமியை மற்றொரு கடத்தல்காரரிடம் ரூ 1.5 லட்சத்திற்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ராகுலின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், ரயில் மூலம் சிறுமியைப் பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 பலாத்காரம்

பலாத்காரம்

அங்குக் கமல் என்ற நபரிடம் அந்த சிறுமியை விற்றுள்ளான். கமல் அந்த சிறுமியை உத்தரப் பிரதேசம் அழைத்துச் சென்று சித்ரா என்ற மற்றொரு பெண்ணிடம் விற்றுள்ளார். அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சித்ரா, 45 வயதான தனது சகோதரருக்கு அந்த சிறுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளார். இருப்பினும், அந்த நபரும் ஒரே மாதத்தில் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார். அப்போது செய்வதறியாமல் இருந்த பெண்ணை, சித்ராவின் மகன் லவ் பலாத்காரம் செய்யத் தொடங்கி உள்ளான்.

 அம்மாவுக்கு ஃபோன்

அம்மாவுக்கு ஃபோன்

அந்த சமயம் எப்படியோ சமாளித்து தனது அம்மாவுக்கு போன் செய்துள்ளார் அந்த சிறுமி! தான் எங்கே உள்ளேன், என்ன நடந்தது என்பதைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், அந்த சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் ராகுலைக் கைது செய்தனர். மேலும், அந்த சிறுமி கூறிய தகவலை வைத்து சித்ராவின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்குச் சென்றனர்.

 பல முறை பலாத்காரம்

பல முறை பலாத்காரம்

அங்கு கமலையும் அவரது மகன் லவ்யையும் கைது செய்தனர். இருப்பினும், அதற்குள் பயந்துபோன சித்ரா, அந்த சிறுமியை மீண்டும் கமலிடமே கொடுத்துவிட்டார். போலீசாரின் நடவடிக்கை குறித்துத் தெரிந்ததும் கமலும் அவனது கூட்டாளியும் ஆத்திரமடைந்து, அந்த சிறுமியைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து காசிபூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் விட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.

 பேசக் கூட முடியவில்லை

பேசக் கூட முடியவில்லை

அப்போது தான் ரயில் நிலையத்தின் ஒரு மூலையில் அதிர்ச்சி அடைந்து இருந்த அந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சிறுமியால் முதலில் பேசக் கூட முடியவில்லை. தொடர்ச்சியான மனநல ஆலோசனைக்குப் பின்னர், ஒரு மாதத்திற்குப் பின்னரே அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பகிர்ந்து கதறி அழுதுள்ளார். அதன் பின்னரும் சிகிச்சைக்காக அரசு காப்பகத்தில் இருந்த அந்த சிறுமி இப்போது 22 வயதில் +2 முடித்துள்ளார்.

 வீடு திரும்பிய சிறுமி

வீடு திரும்பிய சிறுமி

கல்லூரி படிப்பைத் தொடங்க ரெடியாக உள்ள அந்த பெண் இப்போது தான் வீட்டிற்குத் திரும்பி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை கூறுகையில், "நடந்தது நடந்துவிட்டது.. இப்போது எனது மகள் எங்களுக்குக் கிடைத்துவிட்டாள், அதுவே போதும்" என்றார். மேலும், அந்த பெண்ணுக்கு இப்போது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கைது

கைது

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரைக் கைது செய்தனர். காதலிப்பதாக ஏமாற்றிக் கடத்திய ராகுல் மற்றும் சித்ராவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மற்ற குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வங்கத்தில் இருந்து பஸ் மூலம் அந்த சிறுமி அழைத்துச் சென்ற நபரை போலீசாரால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+