பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்.. விமான தளத்தை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம்
உதாம்பூர்: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றும் அதிகரித்த நிலையில் நேற்று ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நடைபெற்று இருக்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்திய எல்லையோரங்களில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் அனைத்தையும் இந்தியா தனது வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் முறியடித்தது. இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இதில் பாகிஸ்தானின் ட்ரோன்களை அழித்த போது அந்த ட்ரோன்களின் பாகங்கள் சிதறி இராணுவ வீரர் மீது விழுந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த அந்த ராணுவ வீரர் தற்போது வீர மரணம் அடைந்திருக்கிறார். இதேபோன்று காஷ்மீர் மாநிலம் புன்ச் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சுடுதல் நடத்திருக்கிறது.
இதில் 25வது பஞ்சாப் ரெஜிமேண்ட்டை சேர்ந்த மேஜர் பவன் குமார் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார். சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மேஜர் பவன் குமார் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் அவருடைய சொந்த மாவட்டமான கங்ராவில் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உயிரிழந்த மேஜர் பவன் குமார் குடும்பத்தாருக்கு இமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுகுவிந்தர் சிங் சுப்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருப்பது எல்லையோர பகுதியில் இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் செய்த அடாவடி செயலால் பலரும் தங்களது வீட்டை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications