கடத்தப்பட்டதாக கூறும் காங் எம்எல்ஏக்கள் யாரென்றே எனக்கு தெரியாது- பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி
கடத்தப்பட்டதாக கூறும் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரென்றே எனக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூர்: பாஜகவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை யாரென்றே தனக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் மொத்தம் சட்டசபையின் பலம் 222-இல் பெரும்பான்மையை பெற 111 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு இருப்பதோ 104 பேர்தான்.

இன்னும் 7 பேரின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏக்களுக்கு வலை வீசி வருவதாக கூறப்படுகிறது. மாலை வாக்கெடுப்பு என்பதால் இன்று காலை தற்காலிக சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பாஜக எம்எல்ஏ சோமசேகர ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கவுடா, ஆனந்த் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களை சோமசேகர ரெட்டி சிறைப்பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஹோட்டலில் இருந்த இரு எம்எல்ஏக்களும் பேரவைக்கு வந்தனர். அவர்களை சோமசேகர ரெட்டி கடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவருக்கு இரு எம்எல்ஏக்களை யாரென்றே தெரியாது என்று சோமசேகர ரெட்டி தெரிவித்துவிட்டார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications