Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல்: உ.பி.யின் மகரில் பிரசாரத்தை தொடங்கினார் மோடி! எதிர்க் கட்சிகள் மீது செம அட்டாக்

உத்தரப்பிரதேசத்தின் மகரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உ.பி.யின் மகர் நகரில் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது ஏன்?- வீடியோ

    மகர்: 2019 லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை துறவி கபீர் நினைவிடம் அமைந்துள்ள மகரில் இருந்து பிரதமர் மோடி இன்று தொடங்கினார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார் பிரதமர் மோடி.

    லோக்சபா தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசத்தின் மகரில் தொடங்கினார்.

    மகரில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி கபீர் நினைவிடம் உள்ளது. இந்து- இஸ்லாமியர் நல்லிணக்கத்துக்கு அரும்பாடுபட்டவர் கபீர். இங்கு கபீர் அகாடமிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசியதாவது:

    மகாத்மாவாக உயர்ந்த கபீர்

    மகாத்மாவாக உயர்ந்த கபீர்

    மகான் கபீர் தம் வாழ்வு முழுவதும் உண்மையைத் தேடினார். மக்களின் மேம்பாட்டுக்கான பாடுபட்டார். ஒரு சாதாரண குடிமகனாக இருந்து மகாத்மாவாக உயர்ந்தவர் கபீர். மகான் கபீர் ஜாதி0களில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஆனால் அனைவரும் சமம் என்பதில் நம்பிக்கை உடையவராக திகழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கபீரின் ஆர்சீர்வாதம் எனக்கு கிடைத்திருப்பதாக உணருகிறேன்.

    உபி மக்கள்

    உபி மக்கள்

    இந்த நாட்டில் அச்சமும் சந்தேகமும் மக்கள் மனதில் எப்போதும் இருக்க வேண்டும் என பலர் எண்ணுகின்றனர். இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முடியும் என அவர்கள் நினைக்கின்றன. இத்தகைய அரசியல் கட்சிகள் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும். சில அரசியல் கட்சிகள் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நீடிக்க விரும்புவதில்லை. கள யதார்த்தத்தை இந்த கட்சிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன. உத்தரப்பிரதேச மக்கள் இத்தகைய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களது உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    சுயநலவாத கட்சிகள்

    சுயநலவாத கட்சிகள்

    அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் சுயநலனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் இவர். மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்கிற சிந்தனை கொண்டவர்கள் இந்த கட்சிகள். கடந்த காலங்களில் அரசுகள் சுய ஆதாயங்களை மட்டுமே கணக்கில் கொண்டன. மக்களின் நலனைப் பற்றி அக்கறை செலுத்தவில்லை.

    சமாஜ்வாடி, பகுஜன் மீது தாக்குதல்

    சமாஜ்வாடி, பகுஜன் மீது தாக்குதல்

    அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தே சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் பேசுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்ற பொய்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பல லட்சம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களில் கோடிக்கணக்கான கழிப்பிடங்களை உருவாக்கியுள்ளோம். ஆயுஸ்மன் பாரத் திட்டத்தின் கீழ் தரமான சுகாதாரத்தை ஏழை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். நாளை என்ன செய்ய நினைக்கிறாயோ அதை இப்போதே செய்துவிடு என்பது கபீரின் வாக்கு. கடந்த 4 ஆண்டுகாலமாக ஏழைகள், பணக்காரர்கள் என்று பார்க்காமல் நாங்கள் உழைத்திருக்கிறோம்.

    அம்பேத்கரை அரசியல் ஆதாயத்துக்காக..

    அம்பேத்கரை அரசியல் ஆதாயத்துக்காக..

    அண்ணல் அம்பேத்கர் அனைவரும் சமம் என்பதற்காக போராடியவர். ஆனால் அவரது சித்தாந்தத்தை சில கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+