அவருக்கு அழகான பெண்களைப் பற்றித்தான் ரொம்பவும் கவலை..சோம்நாத் பார்தி மனைவி 'சுளீர்' பதிலடி
டெல்லி: தன்னுடைய கணவருக்கு அழகான பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும் தான் கவலை இருக்கிறது...என் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்று டெல்லி முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தியை அவரது மனைவி லிபிகா மித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியலில் சர்ச்சை நாயகனான சோம்நாத், டெல்லி சட்டசபையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைப்பது தொடர்பான ஆலோசனையின் போது, டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் கொடுத்து காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இயங்கினால், அழகான பெண்கள் நள்ளிரவிலும் கூட அச்சமில்லாமல் வெளியில் செல்லும் வகையில் முழு பாதுகாப்பை வழங்குவோம் என்று கூறியிருந்தார்.
பெண்கள் குறித்த அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோம்நாத் "அழகான பெண்கள்" என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அவரின் மனைவி லிபிகா கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் சற்று சுமாரான, அழகு குறைந்த பெண் என்பதால்தான் என் கணவர் என்னை மனதளவில் காயப்படுத்தியுள்ளார். அவருக்கு அழகிய பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும்தான் கவலை. என்னைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது என தெரிவித்துள்ளார்.

இதே சோம்நாத் பார்தி, நாயை ஏவி கடிக்கவிட்டு தம்மை சித்ரவதை செய்ததாக லிபிகா முன்னர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications