அடக்கொடுமையே! வைரத்துக்காக மாமனார் மாமியாரைக் கடத்திய மருமகன் - வீடியோ
மாமனார், மாமியாரிடம் வைரம் இருப்பதாகக் கூறி மருமகன் அவர்களை தன் நண்பர்களிடம் சொல்லிக் கடத்தியுள்ளார்.
சித்தூர்: வைர நகை இருப்பதாகக் கூறி மாமனார் மாமியாரை நண்பர்கள் மூலம் கடத்திய மருமகன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன், கலாவதி தம்பதி. இவர்களுடைய மகள் ஷில்பாவுக்கும் சேகர் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வாழ்கின்றனர். ஷில்பா தற்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தன் மாமனார் மாமியாரிடம் வைர நகைகள் இருப்பதாக தன் நண்பர்களிடம் சேகர் கூறியுள்ளார்.மேலும், அவர்களை கடத்துவதற்கும் திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த 1ஆம் தேதி, சேகரின் நண்பர்கள் அவரின் மாமனார், மாமியாரைக் கடத்தியுள்ளனர். இதையடுத்து ஷில்பா சித்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சித்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்தவர்களை விசாரித்ததில் அது வைரத்துக்காக கடத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் - கலாவதி என்பது தெரியவந்தது.
அவர்களைக் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விச்சாரணை செய்து வருகின்றனர். மேலும், கடத்தலுக்குக் காரணமான சேகரை தேடி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications