பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு.. லடாக் வன்முறையில் கைதான சோனம் வாங்சுக் யார்? அதிரவைத்த டிஜிபி
லடாக்: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டது ஏன்? பாகிஸ்தான் உளவுத்துறைக்கும், அவருக்கும் இடையே தொடர்பு என்ன? என்பது பற்றி லடாக் டிஜிபி சிங் ஜம்வால் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் எனவும், லடாக் என்றும் 2 யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக்கை மாநிலமாக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இன்னும் மாநிலமாக்கவில்லை.

லடாக்கை எடுத்து கொண்டால் அரசியலமைப்பு அட்டவணை 6ன்படி வடகிழக்கு மாநிலங்களை போல் சுயாட்சி நடத்தும் வகையில் தனி மாநிலமாக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 10ம் தேதி முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்பட 15 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அதன்பிறகு கடந்த 24ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இது வன்முறையானது. Leh Apex Body இளைஞர் பிரிவை சேர்ந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.போலீஸ் வாகனங்கள், லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே தான் தனிமாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் லடாக் டிஜிபி சிங் ஜம்வால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சோனம் வாங்சுக் கைது பற்றி அவர் விளக்கம் அளித்தார். அப்போது டிஜிபி சிங் ஜம்வால் கூறியதாவது: சமீபத்தில், நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவரை கைது செய்தோம். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சோனம் வாங்சுக் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல் எங்களிடம் உள்ளது. சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் நடந்த Dawn நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் வங்கதேசத்துக்கும் பயணம் செய்தார். அவர் மீது பல கேள்விகள் உள்ளன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 24ம் தேதி வன்முறையை தூண்ட அவர் காரணமாக இருந்தார்.
சோனம் வாங்சுக்கிற்கு தூண்டுதல் தொடர்பான வரலாறு உண்டு. அவர் அரபு ஸ்பிரிங், நேபால் ஜென் ஜி பேராட்டங்கள் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து நிதி (ஒழுங்குமுறை)சட்டம் பிரிவில் அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.
இதையடுத்து லே வன்முறையில் வெளிநாடுகளின் சதி செயல் இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிஜிபி, ‛‛தற்போதைய விசாரணையின்படி புதிதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த வகையில் வன்முறையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவில்லை.
வன்முறை நிகழ்ந்த இடத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் தற்போது எதையும் கூற முடியாது. இதுபற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையே தான் சோனம் வாங்சுக் கைதுக்கு சிவசேனா (யுபிடி) அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛சோனம் வாங்சுக் நம் நாட்டின் ராணுவத்துக்காக சோலார் டெண்ட் டெக்னாலஜியை உருவாக்கி கொடுத்தார். இப்போது அவரை தேசவிரோதி என்று முத்திரை குத்திவிட்டனர். அவரது கைது துரதிர்ஷ்டவசமானது. அதேவேளையில் நம் நாட்டை பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது என்ன மாதிரியான தேசபற்று.
உண்மையில் தேசபற்று இருந்தால் பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டியை நிறுத்தி இருக்க வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை இறுதி போட்டியை தேசப்பக்தி உள்ள அனைவரும் புறக்கணிக்க வேண்டும். நிறுவனங்கள் அந்த போட்டியின்போது விளம்பரங்கள் செய்ய கூடாது'' என்று கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications