கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சோனியா கேள்வி
Subscribe to Oneindia Tamil
சண்டிகார்: கருப்பு பணத்தை கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹரியானா, மகாராஷ்டிராவில் வருகிற 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கினார்.

ஹரியானாவில் மெஹம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
- நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் எதுவும் நடக்காதது போன்றும், ஒரே இரவில் நாட்டின் எல்லோருடைய தலைவிதியையும் மாற்றிவிடுவது போன்றும் ஒரு சூழ்நிலையை பாஜகவினர் உருவாக்கியுள்ளனர்.
- பாஜகவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?.
- பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தால் 100 நாட்களில் கருப்பு பணத்தை கொண்டு வந்துவிடுவோம் என்று வாக்குறுதி அளித்தார்களே என்ன ஆனது?. அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தார்களா?. கண்டிப்பாக இல்லை.
- காங்கிரஸ் அரசின் கொள்கைகளை மோடி அரசு கடத்திக் கொண்டது. வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பக்கூடாது.
- ஹரியானாவில் வளர்ச்சியை கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.
- வாக்குகளுக்காக பாஜகவினர் உங்களுடைய உணர்ச்சிகளுடன் விளையாட முயற்சி செய்யலாம். நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- தவறான கனவுகளை கொண்டு மக்களை கவரும்விதமாக பதவியைபெற முயற்சிப்பவர்களால் மாநில வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் எதையும் செய்யமாட்டார்கள்.
- முந்தைய காங்கிரஸ் அரசின் போது கொண்டுவந்த திட்டங்களை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தற்போது திட்டங்களின் பெயர்களை மாற்றி கொண்டுவந்துள்ளது.
- ஹரியானா வேகமான வளர்ச்சியை பெற மீண்டும் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றிபெற்று ஆட்சியமைக்க செய்ய வேண்டும்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications