டெல்லியில் ஜூன் 9ல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் மாநாடு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு வரும் 9 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பு துறை தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, "தலைநகர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநாடு நடைபெற உள்ளது.

நாட்டில் பாஜக அல்லாத மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக தீவிர செயல்திட்டங்களை வகுப்பது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்
இம்மாநாட்டுக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மாநாட்டில் பங்கேற்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications