இன்று இரவு மன்மோகன் சிங்கிற்கு பிரிவு உபச்சார விருந்து கொடுக்கும் சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று பிரிவு உபச்சார விருந்து அளிக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கின்றன.

Sonia Gandhi to host farewell dinner for PM Manmohan Singh today

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று இரவு பிரிவு உபச்சார விருந்து கொடுக்கிறார். முன்னதாக நேற்று பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார் மன்மோகன் சிங்.

அதன் பிறகு அவர் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொண்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்று மன்மோகன் சிங் ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையே கருத்துவேறுபாடுகள் உள்ளது என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+