நிருபரின் மைக்கை தட்டி விட்ட விவகாரம்... மருமகன் வதேராவிடம் நேரில் "விசாரித்த" சோனியா!
டெல்லி: செய்தியாளர்களின் மைக்கைத் தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கிய தனது மருமகன் ராபர்ட் வதேராவை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. இவர் மீது அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது விதிமுறைகளை மீறி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் தன்னிடம் வினா எழுப்பிய செய்தியாளர் மீது ஆத்திரம் காட்டினார் வதேரா. செய்தியாளரின் மைக்கை தட்டி விட்ட வதேரா, அவரை, ‘உனக்கு என்ன பைத்தியமா?' என கோபமாக திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வதேராவின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தனிப்பட்ட ஒருவரை தொடர்ந்து துரத்துவதுடன், தனியார் விருந்தில் அவரை வெறுப்பேற்றும் வகையில் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தனது மருமகன் வதேராவை சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. பிரியங்காவின் இல்லம் அமைந்துள்ள லோதி எஸ்டேட்டுக்கு சென்ற சோனியா காந்தி அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக வதேராவுடன் பேசியதாக தெரிகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications