லோக்சபா தேர்தல்: சோனியா, ராகுல், கேஜ்ரிவால் வாக்களித்தனர்!
டெல்லி: லோக்சபா தேர்தல் 3வது கட்ட வாக்குப் பதிவு இன்று 91 தொகுதிகளில் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மக்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இத்துடன் ஒடிஷா மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கை இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி நிர்மான் பவானில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அவுரங்கஜிப் லேன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி நாக்பூரில் தனது வாக்கை பதிவு செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தனது வாக்கை சண்டிஹாரில் பதிவு செய்தார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications