சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சிம்லா மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சி?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இவருக்கு 78 வயது ஆகிறது. சோனியா காந்தி தற்போது தனது மகளும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியுடன் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ளார்.

பிரியங்கா காந்திக்கு சிம்லா அருகே பங்களா உள்ளது. சிம்லாவின் புறநகர் பகுதியான சாராபிராவில் பிரியங்கா காந்தியின் பங்களா உள்ளது. அங்கு தான் சோனியா காந்தி தங்கியிருக்கிறார்.
சோனியா காந்தி டெல்லியில் வசித்து வந்தாலும் கூட தற்போது அடிக்கடி சோனியா காந்தி, மகள் பிரியங்கா காந்தியுடன் சிம்லாவில் வசித்து வருகிறார். தற்போது சிம்லா சென்றுள்ள சோனியா காந்திக்கு திடீரென்று இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தனது மகள் பிரியங்கா காந்தியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக பிரியங்கா காந்தி, தாய் சோனியா காந்தியை சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்அங்கு சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டது. சோனியா காந்தி உடல்நலம் தேறினார். இயல்பு நிலைக்கு சோனியா காந்தி வந்தார்.
அதன்பிறகு சிறிது நேரத்தில் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுதொடர்பாக இமாச்சல் பிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், ‛‛ உயர் ரத்த அழுத்தம் காரணமாக சோனியா மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது வழக்கமான பரிசோதனைகள் தான். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்'' என்றார்.
-
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications