2016ம் ஆண்டில் ஓய்வு பெற விரும்பும் சோனியா காந்தி: கலக்கத்தில் காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 2016ம் ஆண்டில் தனது 70வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார் என்று ராஷித் கித்வாய் எழுதியுள்ள 24 அக்பர் ரோடு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ராஷித் கித்வாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். இதையடுத்து அவர் காங்கிரஸ் தலைமையகத்தை மையமாக வைத்து எழுதிய புத்தகம் தான் '24 அக்பர் ரோடு'.
இந்த புத்தகத்தில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.

2016ல் ஓய்வு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 2016ம் ஆண்டில் தனது 70வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறாராம். இது தொடர்பாக சோனியா காங்கிரஸ் தலைவர்களிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனது பிறந்தநாளன்று பேசியுள்ளார்

ஆடிப்போன தலைவர்கள்
சோனியா காந்தி ஓய்வு பெறும் தனது முடிவை தெரிவித்தபோது அதை கேட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து தான் ராகுலை பொறுப்பை ஏற்கச் சொல்லுமாறு சோனியாவை வலியுறுத்தினார்களாம்.

கேபினட்டா, கட்சியா?
கேபினட் அமைச்சர் பதவி அல்லது காங்கிரஸ் கட்சியில் நம்பர் 2 இடம் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங் ராகுல் காந்தியை வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து தான் ராகுல் கட்சியின் துணை தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

இன்னும் பதட்டம்
என்ன தான் ராகுல் காந்தி கட்சியின் துணை தலைவர் ஆக்கப்பட்டாலும் காங்கிரஸார் சோனியா ஓய்வு பெறுவதை நினைத்து கவலையிலேயே உள்ளார்களாம்.

ராகுல் கறார்
சோனியா போன்று இல்லாமல் ராகுல் காந்தி கறார் ஆனவர் என்றும், அதனால் கட்சியினர் ஒன்று அவருக்கு ஏற்றது போன்று நடக்க வேண்டும் இல்லை என்றால் வெளியேற வேண்டும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்வர்
ராகுல் காந்தி உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஆவதில் முனைப்பு காட்டியுள்ளார். ஆனால் கட்சி தான் அவரின் ஐடியாவை ஏற்கவில்லை.

உ.பி. ஈஸி அல்ல
உத்தர பிரதேசம் ஆட்சி செய்ய எளிதான மாநிலம் அல்ல. மேலும் ராகுல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் முடங்கிவிடக் கூடாது என்பதால் தான் அவர் அங்கு எந்த பொறுப்பையும் ஏற்பது நல்லதல்ல என்று அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications