"சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளியுங்கள்": மோடிக்கு சோனியா கடிதம்
டெல்லி: சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் செயல்பாட்டால், தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், சீமாந்திரா பகுதி மக்கள் கடும் கோபத்திலுள்ளனர். மாநில பிரிப்பு சட்டத்தை நிறைவேற்றும் முன்பு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசுகையில், சீமாந்திரா மாநிலத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்ற, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், சீமாந்திரா மாநிலத்துக்கு 10 ஆண்டுகாலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். சீமாந்திராவில் காங்கிரஸ் ஒரு சீட்டும் வெற்றி பெற முடியாத நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை சீமாந்திராவில் வலுத்துவருகிறது. இதுகுறித்து மோடியை நேரில் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "சீமாந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், போலாவரம் அணைக்கட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்க இதுபோன்ற கோரிக்கைகள் பயன்தரும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications