ஜார்க்கண்ட்டில் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல்- ஹேமந்த்சோரன் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதால் பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் இதனால் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தின் 82 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 13, ராஷ்டிரிய ஜனதா தளம் 5 மற்றும் சிறுகட்சிகளைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் என 43 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் ஆட்சி நடத்தி வருகிறார்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சந்திரசேகர் துபே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களான ஹேம்லால் முர்மு, பித்யுத் பாரன் மகதோ ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகினர். இதேபோல் ஹேமந்த் சோரனை ஆதரிக்கும் சிறு கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டனர்.
இதனால் ஹேமந்த் சோரன் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநரை பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications