கேரளாவில் வரும் 30ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குமாம்..! தமிழகத்திற்கு பயன் உண்டா?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 30ஆம் தேதி தொடங்கும் என கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது.
கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 30ஆம் தேதி தொடங்கும் என கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.
இந்நிலையில் கேரளாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும்.

நாடு முழுவதும் தகிக்கும் வெப்பம்
அதைதொடர்ந்து தமிழகத்திலும் மழை பெய்ய தொடங்கும். தற்போது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

எப்போது மழை பெய்யும்?
எனவே தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.

30ஆம் தேதியே பருவமழை
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கொச்சி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றே காற்றுடன் மழை
இதனால் திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. இன்றே கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கடலோர பகுதிகளான விழிஞ்ஞம், கோவளம், சிறையின்கீழ் ஆகிய இடங்களில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யும்?
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் காரணமாக தென் தமிழகத்திலும் இனி படிப்படியாக வெயில் குறைந்து மழை பெய்யும் என தெரிகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications