ரன்வேயிலிருந்து விலகி சறுக்கி ஓடிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!- 78 பயணிகள் உயிர் தப்பினர்
ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுபாதையை விட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 77 பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் உட்பட பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஹீப்ளி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் எஸ்ஜி 1085 பயணிகள் விமானம் கனமழை காரணமாக ஓடுதளத்திலிருந்து விலகி பயங்கர சத்தத்துடன் சரிந்தது.

விமானத்தில் பயணம் செய்த கர்நாடக தகவல் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் உட்பட அனைவரும் அவசரகால வழி மூலமாக வெளியேறினர்.
வெளியே பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினர். முதற்கட்ட தகவலின் படி இரவு 7.15க்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், பயணிகளுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக விமானத்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். காலை 6.40 மணியளவில் விமானம் தரையிறங்கப் போவதாக விமானி அறிவித்தார். கனமழை பெய்வதாகவும் அவர் கூறினார். சிறிது நேரத்தில் விமானம் இறங்கியதும் தடுமாறி சரிந்தது.

விமானம் தரையிறங்கும் போதே சிரமமாக தரையிறங்கியதாகவும், டமால் என்ற சத்தம் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications