யோகி ஆதித்யநாத் பாணியில் பாலக்நாத்.. ராஜஸ்தானில் துறவி முதல்வராக வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேசத்தை போலவே ராஜஸ்தானிலும் துறவி ஒருவர் முதல்வராக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானின் திஜாரா மடத்தின் தலைவர் பாலக்நாத் முதல்வர் ரேஸில் தற்போது முன்னிலையில் உள்ளாராம். அவரை முதல்வராக பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக மேலிடம் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மடத்தின் தலைவர்களுக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பளித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் ஒரு துறவி ஆவார். உபி முதல்வர் யோகியை போல், மேலும் பல துறவிகள் பாஜகவில் முன்னாள் எம்பிக்களாகவும் தற்போதைய எம்பிக்களாகவும் பாஜவில் இருக்கிறார்கள்.

Spiritual leader Mahant Balaknath top BJP contender for Rajasthan CM post

அந்த வகையில் தான் மூன்று துறவிகளுக்கு போட்டியிட ராஜஸ்தானில் பாஜக மேலிடம் வாய்ப்பு அளித்தது. அப்படி வாய்ப்பு அளிக்க அம்மடத் துறவிகளின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக வாய்ப்பு அளித்திருந்தது. ராஜஸ்தானின் திஜாரா மடத்தின் மகந்த் பாலக்நாத், பிரபல ஹவா மெஹல் மடத்தின் ஆச்சார்யா பால்முகுந்த், போக்ரான் மடத்தின் பிரதாப்புரி ஆகியோர் போட்டியிட்டுள்ளார்கள். இந்த மூன்று துறவிகளுமே அதிக சொத்துகள் கொண்ட மிகவும் செல்வாக்கான துறவிகள் ஆவார்.

இதனிடையே எதிர்பார்த்தது போலேவே ராஜஸ்தானில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த முறை மகாராணியான வசுந்தரா முதல்வராக வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள். ஆனால் உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் மகந்த் பாலக்நாத் என்ற செல்வாக்கான சாமியாரை முதல்வராக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதேநேரம் பாஜக முதல்வர் வேட்பாளர் ரேஸில் வசுந்தராவும், தியா குமாரி , கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் உள்ளனர்.

இதில் பாலக்நாத் பெயர் அடிபட காரணம் அவர் துறவி என்பது தான். யோகி ஆதித்யாநாத் பாணியில் பிரதமர் மோடி இவரை முதல்வராக அறிவிக்கக்கூடும் என்கிறார்கள். தற்போது திஜாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாலக்நாத் முன்னிலையில் உள்ளார். இவர் ஆழ்வார் தொகுதியில் எம்பியாகவும் உள்ளார். இவருக்கு 40 வயது ஆகிறது. தேர்தல் முடிவுகளை கேட்டதுமே பாலக்நாத் சிவன் கோவிலில் சென்று வழிப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக வெற்றிக்குக் காரணம், மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பியதுதான் காரணம் என்றார். ஊழல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் அதிகரித்து வரும் குற்றங்களால் மக்கள் காங்கிரஸை நிராகரித்துவிட்டதாக கூறினார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று பாஜக தலைமையகத்தில் அக்கட்சின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை பாலக்நாத் சந்தித்தார்.
பி.எல்.சந்தோஷுடனான சந்திப்பு குறித்து பாலக்நாத் கேட்டதற்கு, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். முதல்வர் பதவி குறித்து பாலக்நாத் கூறுகையில், "முதல்வர் பதவியை பொறுத்த வரையில், நமது பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் முகமாக இருக்கிறார், அவருடைய தலைமையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், யார் முதல்வர் என்பதை கட்சியே எடுக்கும். நான் யாராக இருந்தாலும் மகிழ்ச்சியடைவேன். மக்கள் பிரதிநிதியாக சமுதாயத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன், அதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்," என்றார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை போலவே, பாலக்நாத்தும் நாத் சமூகத்தில் இருந்து வந்தவர், அவருக்கு ஆல்வாரில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இவரை ஏராளமானோர் பின்பற்றுகிறார்கள். பாலக்நாத தனது குழந்தைப் பருவத்தில் 6 வயதில் சந்நியாசம் எடுத்தார். அவர் துறவியாக மாறுவது என்பது அவரது குடும்ப உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவாகும். பாலக்நாத் எப்போதும் சமுதாயத்திற்கு சேவை செய்ய விரும்புவதாக தொடர்ந்து கூறிவருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+