பவானி சிங் நியமனம் செல்லுமா?... மூவர் பெஞ்ச் இன்று விசாரணை
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது செல்லுமா, செல்லாதா என்பது குறித்த வழக்கை இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடியும், தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கிலும், பவானிசிங்கே ஆஜரானார். இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். குமாரசாமி கோர்ட்டிலும், கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் அவர் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினார். ஆனால் அவரது அனைத்து கோரிக்கைகளும் இங்கு தள்ளுபடியாகி விட்டன. தற்போது மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்து இருக்கிறார்.
இதனிடையே பவானிசிங்கை நீக்கவேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் கடந்த 15-ந் தேதி அவர்கள் தீர்ப்பளித்தபோது ஆளுக்கு ஒரு தீர்ப்பை அளித்தனர். பவானி சிங்கின் நியமனம் செல்லும் என்று நீதிபதி பானுமதியும், செல்லாது என்று மதன் பி.லோகுரும் தீர்ப்பளித்தனர். முரண்பட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை நீதிபதி எச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர்.
அதன்படி தற்போது இந்த வழக்கு 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications