காதலை நிராகரித்த மாணவி- விடைத்தாள்களை கிழித்து எறிந்து பழி தீர்த்த மாணவர்
பெல்லாரி: கர்நாடகாவில் தன்னுடைய காதலை நிராகரித்த முன்னாள் தோழியின் விடைத்தாள்களை கிழித்து மாணவர் ஒருவர் பழிதீர்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காகவே விஜயநகர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்தும் செண்டரில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்த அந்த எம்.எஸ்.சி மாணவர், அம்மாணவியின் நான்கு துணைத்தேர்வு விடைத்தாள்களை கிழித்து எறிந்துள்ளார்.
பி. மதுகுமார் என்கின்ற அந்த மாணவரின் இந்த செயலைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரிடம் மதுகுமார் தன்னுடைய குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். "அவர் என்னுடைய காதலை நிராகரித்து விட்டார். அதனால் நான் அவரை பழிவாங்க நினைத்தேன். அதனால்தான் நான் அவருடைய விடைத்தாள்களை கிழித்து கழிவறையில் எறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மதுகுமார், அம்மாணவியுடன் பி.எஸ்சி படித்து வந்த போது அவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அவர் மறுத்ததும், அப்பெண்ணை மிகவும் டார்ச்சர் செய்துள்ளார். மதுகுமார் பி.எஸ்சியில் தோல்வியடைந்த நிலையில், அம்மாணவி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி சேர்ந்துள்ளார். இதனையடுத்து ஒருவருடம் கழித்து அங்கு பகுதி நேரமாக சேர்ந்த மதுகுமார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications