பார் சரவணா பார்... முழுசா நடிகரா மாறி நிக்குற நம்ம ஸ்ரீசாந்தைப் பார்!
கொச்சி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இப்போது நடிகராகி விட்டார். ஏற்கனவே டான்ஸும், பாடவும் தெரிந்த இவர் இப்போது முழுமையான நடிகராக மாறி நிற்கிறார்.
சூதாட்ட வழக்கில் சிக்கி ஆயுள் கால தடை விதிக்கப்பட்டவர் ஸ்ரீசாந்த். இதுதொடர்பான வழக்கிலிருந்து அவர் விடுதலையாகி விட்டாலும் கூட இவர் மீதான தடையை கிரிக்கெட் வாரியம் நீக்கவில்லை.
இருப்பினும் அதுகுறித்து ஸ்ரீசாந்த் கவலைப்படவில்லை. மாறாக திருமணமாகி அழகான பெண் குழந்தைக்கும் தந்தையாகி விட்டார். இப்போது ஜில்லென்று ஒரு நடிகராக களம் குதித்துள்ளார்.

டீம் 5...
டீம் 5 என்ற மலையாளப் படத்தில் ஸ்ரீசாந்த் நடித்து வருகிறார். இதில் நாயகியாக நடிப்பவர் நிக்கி கல்ராணி. டார்லிங், கோ 2 பட நாயகி.

கதை இது தான்...
ஐந்து மோட்டார் சைக்கிள் வீரர்களின் கதைதான் இந்த டீம் 5. இந்தப் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பைக் பிரியர்...
ஸ்ரீசாந்த்தே ஒரு பைக் பிரியர் தான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பைக்கில் ரவுண்டு அடிக்காமல் இருக்க மாட்டார். இப்போது அதுகுறித்து படம் என்பதால்தான் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

சண்டைக் காட்சிகள்...
இப்படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் ஸ்ரீசாந்த்தே நடிக்கப் போகிறாராம். அதற்கேற்ப பயிற்சியும் எடுத்துக் கொண்டுள்ளாராம்.

இந்திப்படம்...
இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் காபரேட் என்ற படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ரீசாந்த்.

பாஜக வேட்பாளர்...
நடிப்பு மட்டுமின்றி ஸ்ரீசாந்த் அரசியலிலும் பிசியாக உள்ளார். கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் ஸ்ரீசாந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications