இந்திய திரையுலகையே கலக்கிய சிவகாசி பெண்.. சென்று வாருங்கள் ஸ்ரீதேவி!
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குழந்தை
இவர் தமிழில் எப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாரோ அப்படித்தான் மற்ற மொழிகளிலும் பிரபலம் ஆனார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்துக் கொண்டு இருந்தார். பல படங்களில் ஆண் குழந்தை வேடத்திலும், சிறு கடவுள் வேடத்திலும் நடித்தார்.

டாப்
அதேபோல் பெரிய ஹீரோயினாக வளர்ந்த பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், விஜய் என முன்னாடி ஹீரோக்கள் எல்லோருடனும் நடித்துள்ளார். கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஜோடி 80களில் இந்திய திரையுலகையே ஆட்டிபடித்துக் கொண்டு இருந்தது.

எல்லா மாநிலத்திற்கும்
இந்தியா முழுமைக்குமான ஹீரோயினாக இவர் இருந்தார். தென்னிந்தியர்களை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பிம்பத்தை நொறுக்கினார். 15 வருடம் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். முக்கியமாக இந்த சிவகாசி அழகியை பாலிவூட் தூக்கி சுமந்தது.

எத்தனை எத்தனை விருதுகள்
அதேபோல் இவர் சிறிய சிறிய மாநில விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகள் வாங்கி இருக்கிறார். 2013ல் பத்ம விருது வாங்கினார். அதேபோல் கேரளா அரசு இவருக்கு பலமுறை விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications