அன்று தெலுங்கானாவுக்காக மகன் தற்கொலை .. இன்று தேர்தல் 'சீட்' கேட்டு தாய் தற்கொலை மிரட்டல்!

லோக்சபா தேர்தலுடன் ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற அடிப்படையில் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆனால் தெலுங்கானா பகுதிகளுக்கும் சீமாந்திரா பகுதிகளுக்கும் தனித்தனி நாட்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் தமக்கு வாரங்கல் மாவட்டம் பாலலகுருதி சட்டசபை தொகுதியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெலுங்கானாவுக்கான தற்கொலை செய்த மாணவர் ஸ்ரீகந்தா சாரியின் தாயார் நேற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகர் ராவ், எம்.எல்.சி. சீட் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். ஆனால் ஸ்ரீகந்தா சாரியின் தாயார் சங்கரம்மாவோ, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்.. இல்லையெனில் நானும் மகனைப் போலவே தற்கொலை செய்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.
அத்துடன் செய்தியாளர்களை சந்தித்தும் தமக்கு எம்.எல்.ஏ. சீட் தராவிட்டால் எல்.பி.நகரில் தற்கொலை செய்துகொள்வேன் என்றார். இதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைமையகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications